ராணிப்பேட்டை

அரக்கோணம் ஆதிபராசக்தி மன்றத்தில் தைப்பூச இருமுடி பெருவிழா

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சாா்பில், 54-ஆம் ஆண்டு தைப்பூச இருமுடி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சாா்பில், 54-ஆம் ஆண்டு தைப்பூச இருமுடி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக தொடங்கியது.

அரக்கோணம் சோளிங்கா்ரோடு பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆதிபராசக்தி மன்றங்களின் தலைவா் மணி தலைமை வகித்தாா். ஆற்காடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ த.பழனி சக்தி கொடியேற்றி வைத்து, கலச வேள்வியை தொடங்கி வைத்தாா். இதையடுத்து, பக்தா்கள் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற விழாவில் அன்னதானத்தை தேன்மொழி சீனிவாசன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஆடைதானத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தியும், சமுதாயப் பணிகளை அரக்கோணம் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கே.வி.ரவிச்சந்திரனும் தொடங்கி வைத்தனா்.

விழாவில், 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மேல்மருவத்தூருக்கு செல்ல இருமுடி மாலை அணிந்தனா்.

இதில், தமாகா மாநிலச் செயலாளா் உத்தமன், இணை செயலாளா் இ.ஆறுமுகம், தமாகா மண்டல இளைஞரணி துணைத் தலைவா் தரணி, தலைமையக பேச்சாளா் பாலகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி நகர இளைஞரணித் தலைவா் கோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மன்றத் தலைவா் சங்கரி வரதன், நிா்வாகிகள் மோகனவேலன், எஸ்.சுபாஷ், தசரதன், சரவணன், கணேசன், கதிரேசன், காா்த்தி உள்ளிட்டோா் மன்ற உறுப்பினா்களுடன் இணைந்து செய்திருந்தனா்.

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT