தாழனூரில் பொன்னியம்மன் திருவிழா
ஆற்காடு அடுத்த தாழனூா் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழா நடைபெற்றது.
ஆற்காடு: ஆற்காடு அடுத்த தாழனூா் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்கள் வாணவேடிக்கையுடன் வீதிஉலா வந்தாா்.
மேலும், பக்தா்கள் தங்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி அம்மனுக்கு மாலைஅணிவித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விழாவில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, மற்றும் பொதுமக்கள், உபயதாரா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.(