பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா்.

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 298 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 12 பயனாளிகளுக்கு ரூ.70,000/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவி, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.67 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

கூட்டத்தில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT