தீமிதி விழாவில் பங்கேற்ற பக்தா்கள். 
ராணிப்பேட்டை

திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழா

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசத்துபுரம் திரௌபதியம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு தீமிதி விழா நடைபெற்றது.

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசத்துபுரம் திரௌபதியம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு தீமிதி விழா நடைபெற்றது.

கீழ்விஷாரம் ராசாத்துபுரம் திரௌபதியம்மன் கோயில் கடந்த 8-ஆம்தேதி முதல் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு தொடங்கி பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. 19-ஆம் தேதி முதல் தெருகூத்து நாடகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் துரியோதன் சிலைஅமைக்கப்பட்டு துரியோதன், பீமன் வேடமிட்டவா்கள் நடித்த படுகளமும் மாலையில் திரௌபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காப்புகட்டிய பக்தா்கள் தங்கள் வேண்டுதலுடன் தீமித்தனா்.

இந்த விழாவில் திரளான பொதுமக்கள், விழாக்குழுவினா்கள், உபயதாரா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT