பயனாளிக்கு நல உதவிகளை வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 475 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.70,000/- வீதம் ரூ.5,60,000-இல் நவீன செயற்கை கை/கால்கள், காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக ரூ.4,000/- மதிப்பிலான காதொலிக் கருவியை வழங்கினாா்.

மேலும், ஆட்சியரின் தன் விருப்பக் கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,500/- வீதம் ரூ.13,000- இல் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, 21 பேர் காயம்

3-வது டி20: இந்தியாவுக்கு 113 ரன்கள் இலக்கு! தொடரைக் கைப்பற்றுமா?

முன்னாள் மலேசிய பிரதமருக்கு 15 ஆண்டு சிறை! ரூ.29,000 கோடி அபராதம்!

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியில் 1,000 காவலர்கள்!

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... லோகேஷ் கனகராஜ்!

SCROLL FOR NEXT