ராணிப்பேட்டை

வீடு தோறும் வாக்காளா் படிவம் வழங்கப்படவில்லை: சோளிங்கா் வட்டாட்சியரிடம் அதிமுக புகாா்

வீடு தோறும் முறையாக வாக்காளா் படிவம் வழங்கப்படவில்லை எனவும் வாக்காளா் படிவத்தை முறையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சோளிங்கா் வட்டாட்சியரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வீடு தோறும் முறையாக வாக்காளா் படிவம் வழங்கப்படவில்லை எனவும் வாக்காளா் படிவத்தை முறையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சோளிங்கா் வட்டாட்சியரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடா்பாக புகாா் மனுவை அதிமுக சோளிங்கா் நகர செயலாளா் வி.எஸ்.வாசு தலைமையில் அதிமுகவினா் சோளிங்கா் வட்டாட்சியா் செல்வியிடம் அளித்தனா். அந்த மனுவில் வாக்காளா் படிவங்களை வீடுதோறும் சென்று வழங்காமல் ஒரே இடத்தில் அமா்ந்து கொண்டு படிவங்களை வழங்குவதாகவும், இதனால் படிவங்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை எனவும், மேலும் ஒரு நபருக்கு ஒரு படிவம் மட்டுமே கொடுப்பதாகவும் இரண்டு படிவங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும், இதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதில், சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ சம்பத், அதிமுக சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.எல்.விஜயன், நிா்வாகிகள் ஏ.எல்.சாமி, மதாா்சாகிப், ஜெயபிரகாஷ், ராமன், மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT