முகப்பு
இந்தியா

வருமான வரித் தாக்கலில் புதிய மாற்றம்! இனி படிவம் 16 இல்லை!

வருமான வரித் தாக்கலில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வரவிருப்பது பற்றி..

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:31 AM
வருமான வரித் தாக்கல்
பகிர்:

மத்திய நிதிநிலை அறிக்கையின்படி, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், வருமான வரி செலுத்தும் தனிநபர்கள், புதிய மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் முறையில் பல மாற்றங்கள் உள்ளன. அதாவது, வருமான வரிக் கணக்குத்தாக்கல் செய்ய நம்முடைய தரவுகளை நாம்தான் இதுவரை பதிவு செய்து வந்துள்ளோம். ஆனால், இனி, வருமான வரிக் கணக்குத் தாக்கல் பக்கத்தைத் திறந்தால், ஒவ்வொரு தனிநபர்களின் விவரங்கள் முழுவதும் பூர்த்தி செய்தே படிவம் திறக்கப்படும். அதிலிருக்கும் தகவல்களை நாம் சோதனை செய்து அது சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்தால் போதும். தவறாக இருந்தால் திருத்தம் செய்யலாம்.

அதுபோல, இதுவரை ஒவ்வொரு தனிநபர்களும் படிவம் 26ஏஎஸ், படிவம் 16 போன்றவற்றை வருமான வரிக் கணக்குடன் இணைத்து வந்தனர். இது தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என பலரும் அறிந்த படிவங்களாக இருந்தன.

Advertisement

ஆனால், இந்த படிவங்களின் எண்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, இனி படிவம் 16 என்பது படிவம் 130 எனவும் படிவம் 16ஏ என்பது படிவம் 131 எனவும் படிவம் 3சிஏ, 3சிபி, 3சிடி போன்றவை படிவம் 26 எனவும் மாற்றப்படுகிறது. ஏற்கனவே படிவம் எண்களில் பலருக்கும் குழப்பங்கள் இருக்கலாம்.

படிவம் 26க்யூ என்பது இனி படிவம் 140 என்றும், 27 க்யூ என்பது படிவம் 144 எனவும், படிவம் 168 என்பது 26ஏஎஸ் எனவும் மாற்றப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, தங்களது வருவாய் மற்றும் செலுத்தும் வரிக்கு ஏற்ப ஐடிஆர் படிவங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. தற்போது ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 என ஏழு வகையான படிவங்கள் உள்ளன.

வருவாய்க்கான ஆதாரம், வருமானத் தொகை, வரி செலுத்துபவரின் வகை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு படிவம் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Regarding the new change in income tax that is about to come into effect..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments