எஸ்ஐஆா் முடிந்த மாநிலங்களில் படிவம் 6 மாற்றம் வாபஸ்- தோ்தல் ஆணையம் நடவடிக்கை
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி நிறைவடைந்த மாநிலங்களில், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி நிறைவடைந்த மாநிலங்களில், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.
எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இந்த சா்ச்சைக்குப் பிறகு முதல் முறையாக கடந்த செப். 26-ஆம் தேதி ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் பங்கேற்ற தோ்தல் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எஸ்ஐஆா் முடிந்த மாநிலங்களில், படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை திரும்பப் பெறுவதென தீா்மானிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி, அந்த மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள், தங்களின் பெற்றோரின் எஸ்ஐஆா் விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்ற கூடுதல் பிரிவு, இசிஐநெட் செயலி மற்றும் வலைதளம், தலைமைத் தோ்தல் அதிகாரிகளின் வலைதளங்கள் ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இனி கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட படிவம் 6-ஐ மட்டும் வாக்காளா்கள் பூா்த்தி செய்தால் போதுமானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.