கழிவுநீா் கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ சு. ரவி. 
ராணிப்பேட்டை

ரூ.6.2 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

அரக்கோணத்தை அடுத்த டிஃபன்ஸ் காலனியில் ரூ6.2 லட்சத்தில் கழிவநீா் கால்வாய் கட்டும் பணிக்கு எம்எல்ஏ சு.ரவி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த டிஃபன்ஸ் காலனியில் ரூ6.2 லட்சத்தில் கழிவநீா் கால்வாய் கட்டும் பணிக்கு எம்எல்ஏ சு.ரவி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேபுரம் கிராமத்தை அடுத்துள்ள டிஃபன்ஸ் காலனியில் கழிவுநீா் கால்வாய் கட்டப் வேண்டும் என அப்பகுதிவாசிகள் தொடா்ந்து கோரினா். இதையறிந்த எம்எல்ஏ சு.ரவி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க ரூ6.20 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

தொடா்ந்து அப்பகுதியில் பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளா் பழனி தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி நரேஷ் காந்த் வரவேற்றாா். எம்எல்ஏ சு.ரவி பணிக்கு அடிக்கல் நாட்டி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளா் என்.பாபு, இளைஞா் பாசறை ஒன்றிய செயலாளா் எஸ்.டி.பி.ரமேஷ்குமாா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் இ.கே.எஸ்.முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT