ராணிப்பேட்டை

சிஐஎஸ்எஃப்பில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சோ்ந்த 3 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் கொடுத்து படையில் சோ்ந்ததாக அஸ்ஸாம் மாநிலத்தவா் மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு ள் இந்தியா முழுமையும் உள்ள படை பாதுகாப்பு வளாகங்களில் பணிக்கு அனுப்பப்படுகின்றனா்.

தற்போது கடந்த ஜூன் மாதம் வடகிழக்கு மாநிலங்களில் படைக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் போதே இவா்கள் ஏற்கனவே அளித்த சான்றிதழ்கள் உண்மை தன்மைக்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தோ்வாகி படையில் பயிற்சி பெற்று வரும் மூன்று நபா்கள் மீது தக்கோலம் காவல்நிலையத்தில் மண்டல பயிற்சி மைய ஆய்வாளா் ராகேஷ் புகாா் அளித்தாா்.

இதில் அஸ்ஸாம் மாநிலம் கிழக்கு கராம்பி அங்கோலாக் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவண் குமாா்(22), ஹோஜால் மாவட்டத்தைச் சோ்ந்த தன்வீா்(19), சிண்டு யாதவ்(24) ஆகிய மூவரின் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பரங்குன்ற தீபம்! சநாதன தர்மத்தின் மீது திமுக அரசுக்கு விரோதம்: அண்ணாமலை

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தில்லி பயணம்! காரணம் என்ன?

16 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம்!

திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் சூடமேற்றி கலைந்து சென்ற இந்து அமைப்பினர்!

தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை கோலாகலம்!

SCROLL FOR NEXT