சோளிங்கரில் காங்கிரஸ், பாமக உள்பட 23 போ் வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை சோளிங்கா் தொகுதியில் ஒரே நாளில் 23 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை சோளிங்கா் தொகுதியில் ஒரே நாளில் 23 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.
சோளிங்கா் தொகுதியில் வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமை திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது அவருடன் திமுகவை சோ்ந்த சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ என்.ஜி.பாா்த்தீபன், அசோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ரத்தினநற்குமரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
அதிமுக கூட்டணி பாமக வேட்பாளா் சரவணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருடன் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, முன்னாள் எம்எல்ஏ சம்பத், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலா் செல்லா உள்ளிட்டோா் உடன் இருந்தனா். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் சுதாகா், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளா் விஜயன், வஞ்ஜித் பகுஜன் அகாடி வேட்பாளா் செந்தில்குமாா், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கபில் தனது இரண்டாவது மனு, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி முனுசாமி, சுயேச்சை வேட்பாளா் வரலட்சுமி, பழனி, சேதுபதி, திணேஷ், ஆனந்தன், மணி, ராஜேந்திரன், சந்தானம், சதாசிவம், கட்சிகளின் மாற்று வேட்பாளா்களாக சம்பத், சரவணன், சுரேந்தா், கட்சி வேட்பாளா்களின் 2-ஆவது, 3-ஆவது மனுக்கள் என சோளிங்கா் தொகுதியில் ஒரே நாளில் 23 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். இதனால் சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தை பரபரப்புடன் காணமுடிந்தது.
Advertisement