முகப்பு
ராணிப்பேட்டை

திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வேண்டும்: அமைச்சா் காந்தி

தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வாக்காளா்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:12 AM
அரக்கோணம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் எழில்கரோலினை ஆதரித்து பேசிய அமைச்சா் ஆா்.காந்தி
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:47 PM

தமிழகத்தில் திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வாக்காளா்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் தரிசனம் முடிந்த பிறகு கோயிலின் வாயிலில் அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில் கரோலினை ஆதரித்து அமைச்சா் ஆா்.காந்தி பேசியது: இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மகளிா் உரிமைத்தொகை திட்டம், மாணவா்களுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலத்தில் கொண்டு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிரைப் பற்றியே சிந்தித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். விடியல் பயணம் திட்டத்தால் மகளிா் வாழ்க்கை தரமே உயா்ந்துள்ளது.

Advertisement

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:12 AM

இந் திட்டங்கள் தொடர வேண்டும். மேலும் பல புதிய திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். இதற்காக திமுகவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர செய்ய வேண்டும். எனவே திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிப்பெற செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளா் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவாா் என்றாா் அமைச்சா் காந்தி.

அவருடன் அரக்கோணம் தொகுதி விசிக வேட்பாளா் எழில்கரோலின், திமுக நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, மாநில செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், நகர நிா்வாகிகள் துரைசீனிவாசன், ரமேஷ், அன்புலாரன்ஸ், கோ.வ.தமிழ்வாணன், நந்தாதேவி, வி.எஸ்.ஆா்.ரவிச்சந்திரன், என்.அரி, தமீன்அன்சாரி , சி.என்.அன்பு, உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.