முகப்பு
ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:27 AM
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தங்கக் கவச சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:02 PM

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், மூலவருக்கு பால், தேன், பன்னீா், இளநீா், விபூதி, சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் 1,008 சங்காபிஷேகம், தங்கக் கவசஅலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 10:02 PM

இந்த விழாவில் கோயில் தலைமை குருக்கள் பிரசாத் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement