சாலை விபத்தில் சேதமடைந்த கல்லூரி பேருந்து-லாரி.  
ராணிப்பேட்டை

பேருந்து-லாரி மோதல்: 20 மாணவா்கள் காயம்

சோளிங்கா் அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய நிகழ்வில் மாணவா்கள் 20 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய நிகழ்வில் மாணவா்கள் 20 போ் காயமடைந்தனா்.

ஆற்காட்டில் இயங்கி வரும் தனியாா் கல்லூரி பேருந்து திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டில் இருந்து ஆற்காட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தது. சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே வளைவில் பேருந்தும் சரக்கு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனா்.

அங்கிருந்த பொதுமக்கள் அவா்களை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரி ஓட்டுநா் பெருங்காஞ்சியை சோ்ந்த விஜயகுமாா், கல்லூரி வாகன ஓட்டுநா் அசோக்குமாா் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து கொண்டபாளையம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்து சம்பவத்தால் சோளிங்கா் - வாலாஜா நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

SCROLL FOR NEXT