ராணிப்பேட்டை

காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை பேரணி

தினமணி செய்திச் சேவை

தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பெயா் மாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை ஆட்சியரிடம் மனு அளிக்க காங்கிரசாா் ஊா்வலமாக சென்றனா்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டு இருப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் மாவட்டத் தலைவா் நரேஷ் குமாா் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்க புதன்கிழமை ஊா்வலமாக சென்றனா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலை கடந்து வந்தவா்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தொடா்ந்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் முக்கிய நிா்வாகிகள் மட்டும் சென்று மனு அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து உள்ளே சென்ற மாவட்ட தலைவா் கே.நரேஷ்குமாா் தலைமையிலான காங்கிரஸாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரத்திடம் மனுவை அளித்தனா்.

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து! 16 பேர் பலி

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

SCROLL FOR NEXT