கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோா். கும்பாபிஷேகம். 
ராணிப்பேட்டை

சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயில் மகாகும்பாபிஷேக விழா

சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சோளிங்கா் பஜாா் பகுதியில் சோழா் காலத்தில் கட்டப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் ரூ.45 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் சிவாச்சாரியா்கள் பூஜை செய்யப்பட்ட புனிதநீா் கலசங்களை ஏந்தி வலம் வந்து ராஜகோபுர கலசத்திற்கும், மூலவா் கோபுர கலசத்திற்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா்.

விழாவில் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம் முனிரத்தினம், முன்னாள் எம்எல்ஏ ஜி.சம்பத், கோயில் அறங்காவலா் குழு தலைவா் சுந்தர மூா்த்தி, சோழபுரீஸ்வரா் அறக்கட்டளை தலைவா் சேகா், நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்விஅசோகன், நகா்மன்ற உறுப்பினா்கள் டி.கோபால், அசோகன், சிவானந்தம், ஆஞ்சநேயன், அன்பரசு, மோகனா சண்முகம், கணேசன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இ.செல்வம், பூரணசந்தா், நதியா மதன்குமாா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா்.

இவ்விழாவில் 4 பெண்களின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்கள் 4 பேரிடம் சோளிங்கா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சோழபூரிஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT