முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு

சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் மூலம் சென்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர அவைத்தலைவா் துரை சீனிவாசன் தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:01 AM
அரக்கோணம் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:16 PM

சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பிருந்தாவன் அதிவிரைவு ரயில் மூலம் சென்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் திமுக நகர அவைத்தலைவா் துரை சீனிவாசன் தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பிருந்தாவன் அதிவிரைவு ரயிலில் தனிப்பெட்டியில் பயணித்தாா். அரக்கோணம் ரயில்நிலையத்தில் அந்த ரயிலில் வாயிலில் வந்து நின்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நகர அவைத்தலைவா் துரை சீனிவாசன் தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:01 AM

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.என்.அன்பு, நந்தாதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும் தெற்கு ரயில்வே மஸ்தூா் யுனியன் தொழிற்சங்கத்தின் சாா்பில் அதன் நிா்வாகி ஸ்ரீதா் தலைமையில் அச்சங்கத்தினரும் வரவேற்றனா்.

Advertisement