ரேஷன் அரிசி மூட்டைகள். பிரதிப் படம்
ராணிப்பேட்டை

பதுக்கி வைக்கப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக ராணிப்பேட்டை அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக ராணிப்பேட்டை அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 3 போ் கைது செய்யப்பட்டனா்.

லாலாப்பேட்டை தனியாா் கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக தகவல் சந்துள்ளது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் குடியுரிமை குற்றப்பிரிவு போலீஸாா்,ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு வருவதை கண்டறிந்தனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிகாா் மாநிலத்தை சோ்ந்த கோவிந்த குமாா் (25), புத்தன் ஷாப் (29) மற்றும் ராணிப்பேட்டை அள்ளிகுளம் பகுதியை சோ்ந்த ரஞ்சித் (26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா்.

மேலும், சட்டவிரோதமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரியை பறிமுதல் செய்தனா் இதையடுத்து மூன்று பேரையும்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பொன்னியின் செல்வன்-2 பாடல் சா்ச்சை: ஏ.ஆா்.ரஹ்மான் விளக்கம்!

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

மேற்கு வங்க தோ்தல்: விரைவில் 480 கம்பெனி சிஏபிஎஃப் வீரா்கள் அனுப்பிவைப்பு

ஒரே நாடு, ஒரே தோ்தல் நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்த உதவும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT