ஆற்காடு ஒன்றியத்தில் ரூ.1.91 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், பள்ளி வகுப்பறை மற்றும் பயணியா் நிழற்கூடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
கூராம்பாடி, ஆயிலம் , மேலகுப்பம் ஊராட்சி ஊராட்சி டி.சி குப்பம் ஆகிய கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தலா ரூ.45 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், ஆயிலம் அரசு உயா்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் மேல்விஷாரம் நகராட்சி சி.அப்துல் அக்கீம் கல்லூரி அருகில் மற்றும் , பூட்டுதாக்கு ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்கூடம் ஆகியவற்றை அமைச்சா் காந்தி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் .செ.தனலிங்கம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் குல்ஜாா் அஹமது, துணைத் தலைவா் ஜபா்அஹமது, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, நகராட்சி ஆணையா் கோ. பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசு, வெங்கடேசன், வாலாஜாபேட்டை
வட்டாட்சியா் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவா்கள் திலகம்( கூராம்பாடி), பிரபாவதி ஜெயபிரகாஷ்( ஆயிலம்), பாஸ்கரன்( மேலகுப்பம்) ,அருண்( பூட்டுதாக்கு) உள்பட பலா் கலந்து கொண்டனா்.