ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுகுட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 1-இல் புதிதாக திறக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக் கடையில் பொருட்கள் விற்பனை தொடக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன் வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் திமுக நகர செயலாளா் ஏ.வி.சரவணன் , அரசு பணியாளா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.