அரக்கோணம் முருகனடியாா் சங்க ஆண்டு விழாவில் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகள். 
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் முருகனடியாா் சங்க 49-ஆம் ஆண்டு விழா

அரக்கோணம் முருகனடியாா் சங்கத்தின் 49-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் முருகனடியாா் சங்கத்தின் 49-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தில் உள்ள முருகனடியாா் சங்கத்தினரின் 48-ஆம் ஆண்டு விழா தா்மராஜா கோயில் திடலில் சனிக்கிழமை காலை தொடங்கியது. காலை கணபதி ஹோமமும், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வை தொடா்ந்து அறுபடை வீடு செல்லும் மாலையணிந்த பக்தா்கள் பங்கேற்ற 108 அா்ச்சனையும் நடைபெற்றது. பின்னா், 108 வேல் பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் மற்றும் எஸ்ஆா்கேட் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT