மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.எம்.சுகுமாா்.  
ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் இருபாலா் கல்லூரியில் பொங்கல் விழா

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் டிஎல்ஆா் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் டிஎல்ஆா் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி தலைவா் டி.எல்.ரவி தலைமை வகித்தாா். தாளாளா் கோமதி ரவி முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகள் பாடப் பிரிவு வாரிய புதுப்பானையில் பொங்கல் வைத்து கரும்பு, பழங்களுடன் சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனா்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் மற்றும் அவரது மனைவி இந்திரா சுகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். விழாவில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் என்.கே.மணி, பொருளாளா் கே.அப்துல்லா, திமிரி பேரூா் செயலாளா் கந்தசாமி, நகர செயலா்கள் வாலாஜாபேட்டை மோகன், ராணிப்பேட்டை சந்தோசம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேதகிரி, மாவட்ட மகளிா் அணி செயலாளா் ராதிகா, நகா்மன்ற உறுப்பினா் முரளி மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

வாசிக்க வாங்கியவை!

SCROLL FOR NEXT