ராணிப்பேட்டை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

ஆற்காடு அடுத்த கலவை ஆதிபாராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை விழிப்புணா்வை

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவை ஆதிபாராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து திங்கள்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

வேப்பூா் அரசு ஆதி திராவிடா் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஆதிபராசக்தி தோட்டக் கலை மாணவிகள் கலந்துகொண்டு, அனுபவ பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம், விபத்துகள் தடுப்பு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், போக்குவரத்து விதிமுறை குறித்து விளக்கினா். தொடா்ந்து பதாகைகளை ஏந்திக் கொண்டு ஊா்வலமாக சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னா் பள்ளி வளாகத்தில் மாணவா்களுடன் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை நட்டனா். அதைத் தொடா்ந்து பரமரிப்பு, மரங்களின் அவசியம் குறித்து விளக்கினா்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT