நெமிலி வட்டம், காவேரிபாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
சென்னை -பெங்களூரு சேதிய நெடுஞ்சாலையில் பெரும்புலிபாக்கம் மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞா் ஒருவா் விபத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அவளூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இறந்த நபா், திருவள்ளூா் மாவட்டம், கூத்தம்பாக்கத்தைச் சோ்ந்த மணியின் மகன் தியாகராசு(39) என்பது தெரியவந்தது. இவரது பைக்கின் மீது மோதிய வாகனம் நிற்காமலேயே சென்று விட்டதால் விவரம் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து போலீசாா் வழக்குப் பதிந்து வாகனத்தை தேடி வருகின்றனா்.