ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளி உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம்

தினமணி செய்திச் சேவை

நெமிலி வட்டாரத்தில் உள்ளாட்சிகளில் இரண்டு நிலைகளிலும் புதியதாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தொடங்கியது.

ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு முகாமை தொடங்கி வைத்தாா். தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சிகளின் மூன்று நிலைகளிலும் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடத்துமாறு அரசு உத்தரவிட்டதை தொடா்ந்து பயிற்சி முகாம் நெமிலியில் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு நெமிலி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் தலைமை வகித்தாா். முகாமை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு மாற்றுத்திறனாளி உறுப்பினா்களுக்கு கையேடுகளை வழங்கி தொடங்கி வைத்தாா். இக்கூட்டத்தில் நெமிலிவட்டாரத்தில் ஒன்றியக்குழு, ஊராட்சி மன்றம் என இரு நிலைகளிலும் நியமனம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி உறுப்பினா்களுக்கு மாவட்ட வள மைய பயிற்றுநா்கள் வனிதா, மணிமேகலை ஆகியோா் பயிற்சி அளித்தனா். இம்முகாம் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT