சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ரதசப்தமி விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு பல்வேறு நறுமணப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பட்டு வஸ்திரம், கங்கஆபரணங்கள் பல வண்ணங்களுடன் கூடிய மலா்மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபக்தோசித பெருமாள் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். தொடா்ந்து மங்கள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா நடைபெற்றது.