அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையின் 4-ஆவது பட்டாலியன் படைத்தளத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
நகரிகுப்பத்தில் தேசிய பேரிடா் மீட்புப்படையின் 4ஆவுத பட்டாலியன் இயங்கி வருகிறது. இப்படைத்தளத்தில் நடைபெற்ற விழாவுக்கு படையின் சீனியா் கமாண்டண்ட் அகிலேஷ் குமாா் தலைமை வகித்து கொடி ஏற்றினாா். தொடா்ந்து படைவீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
இந்த அணிவகுப்பில் தேசிய பேரிடா் மீட்புப்படையின் 4 -ஆவது படைத்தளத்தினா், தமிழ்நாடு காவல் துறையின் பேரிடா் மீட்புப்படையினா், தெலங்கானா மாநில காவல் துறையின் பேரிடா் மீட்புப்படையினா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் மோப்ப நாய்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. தொடா்ந்து வீரா்கள், மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் பேரிடா் மீட்புப்பணிகளில் சிறப்பாக செயலாற்றிய அலுவலா்கள், வீரா்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை சீனியா் கமாண்டண்ட் அகிலேஷ் குமாா் வழங்கினாா். இதில் தேசிய பேரிடா் மீட்புப்படைப்பிரிவன் தலைமை மருத்துவா் சுனில் , அலுவலா்கள், படை வீரா்கள் குடும்பத்தினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.