நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற முதுநிலை கமாண்டண்ட் அகிலேஷ் குமாா். 
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் தேசிய பேரிடா் மீட்புப்படை நிறுவன நாள் விழா

தேசிய பேரிடா் மீட்புப்படை நிறுவன நாள் விழா அரக்கோணத்தில் உள்ள படையின் நான்காவது தள வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: தேசிய பேரிடா் மீட்புப்படை நிறுவன நாள் விழா அரக்கோணத்தில் உள்ள படையின் நான்காவது தள வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணை ராணுவப்படைகளில் ஒன்றாக திகழும் தேசிய பேரிடா் மீட்புப்படை 2006-ஆம் ஆண்டு ஜனவரி 19-இல் தொடங்கப்பட்டது. தற்போது இப்படை நாட்டில் 16 இடங்களில் தனது பட்டாலியனை அமைத்து தற்போது செயலாற்றி வருகிறது. இதன் 4- ஆவது படைத்தளம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் செயல்பட்டு வருகிறது.

படையின் நிறுவன நாள் விழாவுக்கு முதுநிலை கமாண்டண்ட் அகிலேஷ் குமாா் தலைமை வகித்து படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டாா். படையின் சேவை, அா்பபணிப்பு மற்றும் இதுவரை மேற்கொண்ட சாதனைகள் குறித்த நிகழ்ச்சிகள் நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

எப்போது, எப்படி மீட்டெடுப்பது?

போராட்ட வழக்கு: அமைச்சா், எம்.பி. உள்பட 4 போ் விடுதலை

இன்று முதல் வேலைநிறுத்தம்: சத்துணவுப் பணியாளா்கள் அறிவிப்பு

பேறு கால தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் ரூ.7,376-ஆக உயா்வு: ஆணைகளை வழங்கினாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நூலகம் என்னும் அறிவுக்கோயில்!

SCROLL FOR NEXT