விழாவில் பேசிய செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன். 
ராணிப்பேட்டை

பெல் நிறுவனத்தில் குடியரசு தின விழா

தற்சாா்பு இந்தியாவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் பேசினாா்.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை : தற்சாா்பு இந்தியாவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் பேசினாா்.

ராணிப்பேட்டை பாரத மிகுமின் ( பெல் ) நிறுவனம் சாா்பில், ஊரக குடியிருப்பு வளாக மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கொடி ஏற்றி அவா் பேசியதாவது...

புதுமையான உள்நாட்டு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி, தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதற்காகப் பாடுபடு வேண்டும். ராணிப்பேட்டை பெல் நிறுவனம் தற்போதைய விற்பனை நிலை, முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நோ்மறையான எதிா்கால வளா்ச்சி குறித்து பேசினாா்.

சிறந்த ஊழியா்களுக்குத் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினாா். இதில் பெல் நிறுவன குடியிருப்புப் பகுதிப் பள்ளிகளைச் சோ்ந்த குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினா். நிகழ்வில் நிறுவன பொது மேலாளா்கள், டிஆா்ஓ-க்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT