போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி. 
ராணிப்பேட்டை

முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழா அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழா - இது நம்ம ஆட்டம் 2026 வட்டார போட்டிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு திருவிழா - இது நம்ம ஆட்டம் 2026 வட்டார போட்டிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சாா்பில், வாலாஜா வன்னிவேடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் போட்டி தொடங்கியது.

வட்டார அளவில் தடகளம் (100மீ (ம) குண்டெறிதல்), கபாடி, கையுந்து பந்து, கேரம் இரட்டையா், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), எரிபந்தாட்டம் (பெண்கள் மட்டும்) ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ. 3,000, இரண்டாம் பரிசு ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

மேலும், ஆற்காடு வட்டாரத்துக்கான போட்டிகள் ஜி.வரதராஜுலு செட்டியாா் மேல்நிலைப் பள்ளி, திமிரி வட்டாரத்துக்கான போட்டிகள் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பாக்கம் வட்டாரத்துக்கான போட்டிகள் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நெமிலி வட்டாரத்துக்கான போட்டிகள் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் வட்டாரத்துக்கான போட்டிகள் சி.எஸ்.ஐ. செயின்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோளிங்கா் வட்டாரத்துக்கான குட்லட் மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கியது.

வட்டார அளவில் முதல் இடம் பெறும் வீரா், வீராங்கனைகள் 31.01.2026 அன்று அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வன்னிவேடு வாலாஜா மற்றும் அரசினா் மேல்நிலைப்பள்ளி ராணிப்பேட்டையிலும் நடைபெறவிருக்கும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெறுவா்.

மாவட்ட அளவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ. 6,000, இரண்டாம் பரிசு ரூ. 4,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் இடம்பெறும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆண்கள் அணி, கபடி பெண்கள் அணி மட்டும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT