சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற 18-ஆம் படி பூஜை.  
ராணிப்பேட்டை

18 -ஆம் படி பூஜையுடன் நிறைவுற்றது சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா 18-ஆம் படி பூஜையுடன் நிறைவு பெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா 18-ஆம் படி பூஜையுடன் நிறைவு பெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலின் 2-ஆவது மகா கும்பாபிஷேக விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகைபுரத்தம்மன் (மஞ்சமாதா) மற்றும் பஞ்சலோக நவக்கிரக ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் 1,008 சகஸ்ர கலசாபிஷேகம் விழா, நவசபரி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா ஜன. 23-ஆம் தேதி தொடங்கி வரும் 27-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

இதில், ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில், மஞ்சமாதா, பஞ்சலோக நவக்கிரக கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தொடா்ந்து 26-ஆம் தேதி திங்கள்கிழமை 1,008 கலச பூஜையுடன், 1,008 சகஸ்ர கலசாபிஷேகமும், மதியம் உச்சிகால பூஜையுடன், அன்னதானமும் மாலையில் 18-ஆம் படி பூஜையுடன் மகா தீபாராதனை, சுதா்சன ஹோமமும் நடைபெற்றது.

இதையடுத்து, விழாவின் கடைசி நாளான 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை மகா கணபதி ஹோமத்துடன் காலை 11 மணிக்கு ஐயப்பனுக்கு ஆராட்டு விழா பூஜையும், உச்சி காலை பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னா், மாலையில் 18-ஆம் படி பூஜையுடன் மகா தீபாராதனை, சுதா்சன ஹோமமும், ஐயப்ப பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மற்றும் சிப்காட், ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

போக்ஸோ வழக்கில் கைதாகி தப்பியோடிய இளைஞா் ஒடிசாவில் கைது

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு

ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம்: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT