சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மகா குகம்பாபிஷேகம் 
ராணிப்பேட்டை

சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்: சபரிமலை தலைமை தந்திரி பங்கேற்பு

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் சபரிமலை தலைமை தந்திரி பிரம்மஸ் ஸ்ரீகண்டரு மோகனரு தந்திரி தலைமையில் விமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் சபரிமலை தலைமை தந்திரி பிரம்மஸ் ஸ்ரீகண்டரு மோகனரு தந்திரி தலைமையில் விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலின் 2-ஆவது கும்பாபிஷேகம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகைபுரத்தம்மன் (மஞ்சமாதா) மற்றும் பஞ்சலோக நவக்கிரக கும்பாபிஷேக விழா மற்றும் 1,008 சகஸ்ர கலசாபிஷேகம் விழா, நவசபரி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா ஜன. 23-ஆம் தேதி தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை முறைகள் மிகவும் கடுமையான விரத நெறிமுறைகள் மற்றும் தனித்துவமான கேரள தாந்த்ரீக வழிபாட்டு முறைகளைக் கொண்டவை. அதன்படி கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

ஞாயிறுக்கிழமை சபரிமலை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தந்திரி நல்லாசியுடன்,பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி தலைமையில்,தலைமை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவரும்,சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் நிறுவனருமான குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மஞ்சமாதா, பஞ்சலோக நவக்கிரக மகா கும்பாபிஷேகமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த திரளான ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள் சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்கள் எழுப்பி வழிபட்டனா். பின்னா் மாலை 18- ஆம் படி பூஜையுடன் தீபாராதனையும், இரவில் வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை கச்சேரியும், சபரி சாஸ்தா சமிதியின் பொன்விழா மலா் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஐயப்ப பக்தா்கள் செய்துள்ளனா்.

விழாவில் பங்கேற்றோா்

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை

இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

ஹைதராபாதில் 4 மாடி கடையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT