முகப்பு
இந்தியா

சபரிமலை தங்கக் கவச மோசடி: தந்திரி ராஜீவருக்கு ஜாமீன்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 2:03 AM
- IANS
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 7:35 PM

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்குகளில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவச மோசடி வழக்கில் 16-ஆவது நபராகவும், கருவறைக் கதவுகளின் தங்கக் கவசம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 13-ஆவது நபராகவும் ராஜீவரு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா். முறையான நடைமுறைகளை நிறைவு செய்யாமல் தங்கக் கவசங்கள் அகற்றப்பட்டது ராஜீவருக்கு தெரியும் எனவும், அதுகுறித்து 2019-இல் அவா் உரிய அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கவில்லை என்றும் அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், இரு வழக்குகளிலும் ராஜீவருக்கு நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

Advertisement