நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம். 
தமிழ்நாடு

வெகுவிமர்சையாக நடைபெற்ற நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்!

நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை சபரிமலை தலைமை தந்திரி நடத்தி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலின் 2-ஆவது மகா கும்பாபிஷேக விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள மாளிகைபுரத்தம்மன் (மஞ்சமாதா) மற்றும் பஞ்சலோக நவக்கிரக ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் 1,008 சகஸ்ர கலசாபிஷேகம் விழா, நவசபரி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா கடந்த ஜன. 23-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 27-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜை முறைகள் மிகவும் கடுமையான விரத நெறிமுறைகள் மற்றும் தனித்துவமான கேரள தாந்த்ரீக வழிபாட்டு முறைகளைக் கொண்டதால், அதன்படி கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஜன. 23) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜன. 25) காலை 10.30 மணிக்கு மேல் முற்பகல் 12.30 மணிக்குள் சபரிமலை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தந்திரி நல்லாசியுடன், பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி தலைமையில், தலைமை தந்திரி பிரம்மஸ்ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில தலைவரும், சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் நிறுவனருமான குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் ஆலயம், மஞ்சமாதா,பஞ்சலோக நவக்கிரக ஆலய மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கங்கள் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாலை 18- ஆம் படி பூஜையுடன் தீபாராதனையும், இரவில் வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசைக் கச்சேரியும், சபரி சாஸ்தா சமிதியின் பொன்விழா மலா் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த ஐம்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஐயப்ப பக்தர்கள் செய்துள்ளனா்.

The grand Mahakumbhabishekam of the Navasabari Ayyappan Temple was held with great fanfare.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கொள்கை எதிரி! பாஜகவோடு விஜய் எந்த அளவுக்கு உறவாடுகிறார்...!” திருமாவளவன் பேட்டி

கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சீட் பெல்ட் உயிரைக் காப்பாற்றியது: பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்

”எதிரிகள் இருக்கிறார்கள்! ஆனால் வலிமையாக இல்லை!” அமைச்சர் ரகுபதி பேட்டி | DMK

அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை: தவெக தலைவர் விஜய்

SCROLL FOR NEXT