தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்)
ராணிப்பேட்டை

அஜித்பவாா் விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் உயிரிழக்க காரணமான விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் உயிரிழக்க காரணமான விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரயில் மூலமாக காஞ்சிபுரம் செல்ல புதன்கிழமை அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு அவா் வந்தாா்.

அவருக்கு ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா் தலைமையிலான கட்சியினா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது, அவா் கூறியது: மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித்பவாா் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளிவர இருப்பதாக தெரிவித்த சில நாள்களுக்குள் விமான விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து மம்தா பானா்ஜி என்ன சொல்லியிருக்கிறாா் எனத் தெரியவில்லை. இருப்பினும் என்னை பொருத்தவரை ஒரு விபத்து நடைபெற்றுள்ளது. அது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மொத்தம் 74 மாவட்டத் தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 3 மாவட்டத் தலைவா்கள் விரைவில் அறிவிக்கப்படும். மொத்தம் 77 பேரில் பெருமளவில் இளைஞா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் வரும் தோ்தலில் எதிரொலிக்கும் என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.நரேஷ்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT