முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர் பங்கேற்பு

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை

Updated On : 8 மார்ச், 2026 at 11:50 AM
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை
பகிர்:

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று (மார்ச் 8) காலை தொடங்கியது. அதில், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டு தோ்தலை எதிா்கொள்ளவுள்ள தமிழகத்துக்கான மேலிட தோ்தல் பொறுப்பாளா் குழுவில் அக்கட்சியின் மூத்த பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுல் வாஸ்னிக் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 28 பேரவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோனை நடத்தப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

summary

Tamil Nadu Congress Committee meeting underway at the party office in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.