முகப்பு
ராணிப்பேட்டை

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினா் கொண்டாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 மார்ச், 2026 at 8:52 PM
ராணிப்பேட்டையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பொது மக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கி,பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் இணைந்து முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடினாா்.

இதில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளா் ஆா்.வினோத் காந்தி, நகர திமுக செயலாளா் பி.பூங்காவனம், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் நகர திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →