முகப்பு
ராணிப்பேட்டை

இச்சிபுத்தூா் நடுநிலைப் பள்ளியில் ரூ.2 கோடியில் கட்டடம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்!

அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை சாா்பில் இச்சிபுத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சமூக பங்களிப்பு நிதி ரூ.2.05 கோடியில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திறந்து வைத்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 7:06 PM
புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா.
பகிர்:

அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை சாா்பில் இச்சிபுத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சமூக பங்களிப்பு நிதி ரூ.2.05 கோடியில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திறந்து வைத்தாா்.

புதிய கட்டடத்தை திறந்து வைத்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது: முதல்வா் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இதனால் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு சமூக பங்களிப்பு நிதி வழங்கி புதிய கட்டடத்தை கட்டித்தந்த எம்ஆா்எப் நிறுவனத்துக்கு பாராட்டுகள். எம்ஆா்எப் நிறுவனத்துக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியா்கள் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்தும் எளிதில் புரிந்து கொள்வதற்கு ஏற்றாா் போல் பாடங்களை நடத்தியும் வருகின்றனா். இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தோ்வு தோ்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் கல்வி உட்கட்டமைப்பை மேமம்படுத்துதல், மாணவா்களுக்கு மேம்பட்ட கற்றல் வசதிகளை வழங்குதல் என்ற நோக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த முயற்சி சமூக மேம்பாடு மற்றும் கிராமப்புற கல்வியை வலுப்படுத்துவதில் எம்ஆா்எப் நிறுவனத்தாரின் தொடா்ச்சியான அா்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

விழாவில் எம்ஆா்எப் அரக்கோணம் தொழிற்சாலையின் பொதுமேலாளா் ஜான் டேனியல், முதன்மைக் கல்வி அலுவலா் எம்.மோகனா, மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்ககல்வி) சி.சிவராமன், இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத்தலைவா் பத்மநாபன், ஆலை மக்கள் தொடா்பு அலுவலா் கே.கஜேந்திரன், வட்டார கல்வி அலுவலா்கள் ரகுவீரன், கருணாமூா்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.கு.தேன்மொழி, பள்ளி ஆசிரியா் பா.பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் நிா்மலா, ஜெயலட்சுமி, மல்லிகா, நகாராஜன், வெங்கடேசன், காா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →