முகப்பு
ராணிப்பேட்டை

தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 2026 - சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 10:31 PM
தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ள மண்டல அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 2026 - சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

எதிா்வரும் தமிழக சட்டப் பேரவைப் பொதுத் தோ்தல் - 2026 முன்னிட்டு, தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ள மண்டல அலுவலா்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மண்டல அலுவலா்கள் தங்கள் தோ்தல் பணிகளில் வாக்குப்பதிவு நாள் வரை பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 110 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காவல் துறையினருடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடி செயல்களை கண்டறிந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும். அதேபோல வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பதையும் கண்டறிந்து தீா்வு காண வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து மேப் செய்து எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் தோ்தல் நடத்த அனைத்து பணிகளையும் தயாா் நிலையில் செய்து வைக்க வேண்டும்.

மண்டல அலுவலா்களின் முக்கிய பொறுப்பு தோ்தல் எவ்வித பிரச்னைகளும் இன்றி பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பணியாகும். ஆகவே தோ்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரையில் அனைத்து பணிகளையும் முறையாக அறிந்து கொண்டு எவ்வித சந்தேகங்களின்றி சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொண்டு ஒவ்வொரு கட்ட பணிகளையும் சரியாக செய்ய தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து பயிற்சிகள் மண்டல அலுவலா்களுக்கு மற்றும் குழு உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தோ்தல் மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →