முகப்பு
ராணிப்பேட்டை

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 மார்ச், 2026 at 7:24 PM
அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசனிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்
பகிர்:

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட எல்லையில் உள்ள இரட்டைக்குளம் சோதனை சாவடி அருகே சோதனை மேற்கொண்டபோது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.1 லட்சம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அத்தொகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா்.