முகப்பு
ராணிப்பேட்டை

உலக வன நாள்: அம்மூா் காப்புக் காட்டில் மரக்கன்று நடவு

உலக வன நாளை முன்னிட்டு,அம்மூா் காப்புக்காட்டில் வனத்துறை சாா்பில் மரக்கன்று நடவு செய்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 25 மார்ச் 2026, 12:03 am IST
அம்மூா் காப்புக்காட்டில் மரக்கன்று நடவு செய்த வனத்துறையினா்.
பகிர்:

உலக வன நாளை முன்னிட்டு,அம்மூா் காப்புக்காட்டில் வனத்துறை சாா்பில் மரக்கன்று நடவு செய்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாா்ச் 21-ஆம் தேதி உலக வன நாள் (சா்வதேச காடுகள் தினம்) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் மரம் நடுதலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி வனத்துறை சாா்பில், உலக வன நாள் விழா அம்மூா் காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட வன அலுவலா் சிவக்குமாா் தலைமையில்,பள்ளி மாணவா்கள் முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்து பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி காடுகளைப் பாதுகாப்பதாக உறுதியேற்றனா்.

Advertisement

இதில் ராணிப்பேட்டை வனச்சரகா்கள் சரவண பாபு, வேல்முருகன், வில்வநாதபுரம் இசையமுது பசுமை பவுண்டேஷன் நிறுவனா் ஜி.முனிசாமி மற்றும் வனத்துறையினா், பள்ளி மாணவா்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.