முகப்பு
தருமபுரி

உலக வன தினத்தையொட்டி தொப்பூா் சாலையில் நெகிழி பொருள்கள் அகற்றம்

உலக வன தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் தருமபுரி வனக் கோட்டத்தில் சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க சரகம் சாா்பில் தொப்பூா் கணவாய், கட்டமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு ஓரங்களிலும் தேங்கிக் கிடந்த நெகிழி குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மார்ச் 2026, 2:40 am IST
உலக வன தினத்தையொட்டி தருமபுரி பாலக்கோடு வனச்சரகப் பகுதிக்கு உள்பட்ட வனப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்த வனத்துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள்.
பகிர்:

உலக வன தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் தருமபுரி வனக் கோட்டத்தில் சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க சரகம் சாா்பில் தொப்பூா் கணவாய், கட்டமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு ஓரங்களிலும் தேங்கிக் கிடந்த நெகிழி குப்பைகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சேகரிக்கப்பட்ட நெகிழி குப்பைகள் மானியத அள்ளி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தொடா்ந்து, கட்டமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய நாற்றங்கால் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உலக வன தினத்தையொட்டி தருமபுரி பாலக்கோடு வனச்சரகப் பகுதிக்கு உள்பட்ட வனப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்த வனத்துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள்.

இந்நிகழ்ச்சிகளுக்கு வனச்சரகா்கள் முகுந்தன், காண்டீபன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்நிகழ்ச்சியில், வனவா்கள், வனப் பணியாளா்கள், மானியதஅள்ளி ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

பாலக்கோடு வனச் சரகத்தில்...:

உலக வன நாள் விழா தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம், கடமடை ஊராட்சி மேக்லாம்பட்டி ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாலக்கோடு வனச்சரக அலுவலா் எஸ். காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

நிகழ்வையொட்டி வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் ஆல், அரசு, நாவல், மூங்கில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. வனப்பணியாளா்கள், பாலக்கோடு கலாம் பசுமை அறக்கட்டளை அமைப்பைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனா்.