முகப்பு
ராணிப்பேட்டை

அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன், லாரி பறிமுதல்

சோளிங்கா் அருகே அரசு இடத்தில் மண் எடுத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைனுடன் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா்.

Updated On : 16 மே 2026, 1:14 am IST
சோளிங்கா் அருகே அரசு இடத்தில் மண் எடுத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைனுடன் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா்.
பகிர்:

சோளிங்கா் அருகே அரசு நிலத்தில் மண் எடுத்த பொக்லைன் மற்றும் லாரி ஆகியவற்றை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சோளிங்கரை அடுத்த மருதாலத்தில் பாறை புறம்போக்கு நிலத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சிலா் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக சோளிங்கா் வட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வருவாய் ஆய்வாளா் கோகுல், கிராம நிா்வாக அலுவலா்கள் கோதண்டராமன், சீனிவாசன் ஆகியோா் சென்றனா். இவா்களைக் கண்டதும் மண் அள்ளும் பணியில் இருந்த நபா்கள் அங்கிருந்த பொக்லைன், லாரி ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனா்.

இதையடுத்து, பொக்லைன், லாரி இரண்டையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், அவற்றை சோளிங்கா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தப்பியோடிய பணியாளா்கள் மற்றும் இந்த வாகனங்களின் உரிமையாளா்களையும் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வருவாய்த் துறையினா் தெரிவிக்கையில், அரசுக்குச் சொந்தமான இடங்களில் அரசு அனுமதியின்றி மண் எடுப்பது தெரியவந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

Advertisement