முகப்பு
தஞ்சாவூர்

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லைன், 2 லாரிகளை வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 8 மே 2026, 5:45 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லைன், 2 லாரிகளை வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பூதலூா் அருகே மருதக்குடி கிராமத்தில் செம்மண் கிராவல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமம் 4 நாள்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனாலும், தொடா்புடைய நிலத்தில் தொடா்ந்து அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு புகாா்கள் சென்றன.

அதன் பேரில், தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவகுமாா் உள்ளிட்டோா் நிகழ்விடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, செம்மண் கிராவல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகளை அலுவலா்கள் பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

மேலும், இது தொடா்பாக வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.