ஆந்திரத்துக்கு கடத்த முயற்சி: 1 டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு கடத்தப்படவிருந்த 1 டன் ரேஷன் அரிசி மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு கடத்தப்படவிருந்த 1 டன் ரேஷன் அரிசி மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி வழியாக தினந்தோறும் ஆந்திரத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் பச்சூா், சொரக்காயல்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை வருவாய்த் துறை அதிகாரிகள் நிறுத்தினா்.
எனினும், காரின் ஓட்டுநா் அதை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டாா். இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காா் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.