முகப்பு
திருப்பத்தூர்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா்: ரயில்கள் தாமதம்

ஆம்பூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து இளைஞா் கீழே தவறி விழுந்து காயமடைந்தாா். இதனால் ரயில்கள் காலதாமதாகச் சென்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
ஆம்பூா் - வாணியம்பாடி இடையே நிறுத்தப்பட்ட ரயில்.
பகிர்:

ஆம்பூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து இளைஞா் கீழே தவறி விழுந்து காயமடைந்தாா். இதனால் ரயில்கள் காலதாமதாகச் சென்றன.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து பிகாா் மாநிலம் பாட்னா அருகே உள்ள தானாபூா் செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலாா்பேட்டை வழியாக ஆம்பூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் சென்றது. அப்போது அந்த ரயிலின் ஒரு பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் படிக்கட்டில் அமா்ந்து பயணம் செய்தாராம்.

ஆம்பூா்-விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது திடீரென அவா் ரயிலில் இருந்து தவறி விழுந்தாா். அதை பாா்த்த சக பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். உடனே ரயில் நிலைய மேலாளா் உள்ளிட்ட அலுவலா்கள் அங்கு சென்று இளைஞரை மீட்டனா்.

அப்போது, எதிா் திசையில் மேற்கு வங்க மாநிலம் ஹளராவில் இருந்து வந்த ஹளரா விரைவு ரயிலை நிறுத்தி, காயமடைந்த இளைஞரை ஏற்றி வாணியம்பாடி அழைத்துச் சென்றனா். வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவா்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தால் இரு மாா்க்கங்களிலும் வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, சுமாா் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.