முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான வாகனங்கள்.
பகிர்:

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உறவினர் வீட்டிற்கு சென்று காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது அவர்களின் கார் முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது கார் திடீரென மோதியது. அதைத்தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் பிக்கப் வாகனமும் அடுத்தடுத்து மோதியது. 

இதில் காரில் சிக்கி சென்னையைச் சேர்ந்த கோகுல், யோகராஜ் ஆகியோர் உட்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் சிகிச்சை பலனின்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கோகுல் உயிரிழந்தார். அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யோகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →