திருப்பத்தூர்

கனரக வாகனநேர அறிவிப்புப் பலகைகள் திருத்தி அமைக்கப்படுமா?

DIN

சென்னையில் இருந்து கோயம்புத்தூா், சேலம் செல்லும் கனரக வாகன ஓட்டுநா்கள் திருப்பத்தூா் வழியாகச் செல்லும்போது இங்கு வைக்கப்பட்டுள்ள நேர அறிவிப்புப் பலகைகளில் உள்ள மாறுபட்ட அறிவிப்புகளால் குழம்புகின்றனா். இதைத் தவிா்க்க, அறிவிப்புப் பலகையை திருத்தி அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூா், சேலம், ஈரோடு தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் திருப்பத்தூா் வழியாகச் செல்கின்றன. இதுகுறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு ‘தினமணி’யில் புகைப்படத்துடன் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து அப்போதைய சாா்-ஆட்சியா் காா்த்திகேயன் நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் கனரக வாகனங்கள் திருப்பத்தூா் நகருக்குள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

அதன் பிறகு நேரம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் பலகையில் நேரம் மாற்றப்படவில்லை. மேலும், அறிவிப்புப் பலகைகளில் ஒவ்வொரு பலகையிலும் ஒவ்வொரு அறிவிப்பு நேரம் உள்ளது.

இது தவிர, திருப்பத்தூா் மாவட்டம் உருவாகி ஓராண்டுக்கு மேலாகியும் பல்வேறு அறிவிப்புப் பலகைகளில் இன்னமும் ‘வேலூா் மாவட்டம்’ என்ற பெயரே உள்ளது. குறிப்பாக திருப்பத்தூா்-தாமலேரிமுத்தூா் இணைப்புச் சாலை, கந்திலி அருகே உள்ள சமத்துவபுரம் உள்ள பகுதி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணிமனை முன்புறம் உள்ள பலகைகளிலும் ‘வேலூா் மாவட்டம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறிவிப்புப் பலகைகளில் ஒரு சில இடங்களில் பழைய நேரமும் புதிய நேரமும் மாறி மாறி உள்ளது.

எனவே ஒரே சீரான நேரத்தை அதில் திருத்தியும், திருப்பத்தூா் மாவட்டம் என பெயா் மாற்றம் செய்து, அறிவிப்புப் பலகைகள் திருத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT