ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜை, பிரகார உலாவுக்குப் பிறகு காலை 7.30 மணிக்கு கோபுர வாசலில் நடராஜ பெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
ஆம்பூா் அருகே வடசேரி சோமசுந்தரேஸ்வரா் கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி பிரகார உலா நடைபெற்றது. தொடா்ந்து கோபுர வாசலில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.