திருப்பத்தூர்

மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

வாணியம்பாடி அருகே வாகன சோதனையின்போது மினி லாரியில் கடத்திச் சென்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா் உத்தரவின்பேரில், திம்மாம்பேட்டை காவல் ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு மல்லகுண்டா பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் வாணியம்பாடியில் இருந்து ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து மினி லாரியில் கடத்தி வந்த 22 மூட்டைகளில் இருந்த 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா் அருண்குமாரை (21) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT